Connect with us

CINEMA

ஜீவா அக்கா மறைவுக்கு பின் குடும்பத்துல ஒற்றுமை இல்ல.. தயவுசெஞ்சி இதை மட்டும் பண்ணுங்க.. இளையராஜாவின் உறவினர் வைத்த கோரிக்கை..

இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி சமீபத்தில் காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இலங்கையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இளையராஜா மனைவி ஜீவா, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே, இதே போல் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

   

இந்நிலையில், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த பவதாரணியின் சித்தி ஒருவர் நேர்காணலில் கூறியிருப்பதாவது, நான் திருமணம் செய்துக் கொண்டு கடந்த 1991ம் ஆண்டில், இங்கு வந்தேன். அப்போது பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினர், ஏதேனும் தீபாவளி, பொங்கல் என்றால், அவர்களது அம்மா சின்னத்தாயி நினைவு நாள் என்றால் இங்கு சொந்த ஊருக்கு வந்துவிடுவர்.

இங்குள்ள வீட்டின் முன்பு பந்தல் போட்டு, லைட் கட்டி விடுவர். பாஸ்கர் அவரது மனைவி, இளையராஜா, அவரது மனைவி ஜீவா, கங்கை அமரன், அவரது மனைவி இப்படி அவர்கள் வரிசையாக நின்று இங்குள்ள சொந்த பந்தங்களுக்கு வேட்டி, சேலை துணிமணிகள், அரிசி பருப்பு சாமான்கள், ஸ்வீட்ஸ் பாக்ஸ் என்று தருவார்கள்.

அப்படி அவர்கள் ஒற்றுமையாக இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. தனது சொந்த அக்கா கமலம்மா மகள் ஜீவாவை தான் இளையராஜா திருமணம் செய்திருந்தார். அந்த அக்கா, தேனி பக்கம் வந்தால் இங்கு வீட்டுக்கு வந்து பார்க்காமல் போக மாட்டார்கள். வௌ்ளிக்கிழமை வீட்டுக்கு தீபம் ஏற்றுவார்கள்.

ஆனால் கமலம்மா, ஜீவா ஆகியோர் மறைவுக்கு பிறகு குடும்ப ஒற்றுமையே இல்லாமல் போய்விட்டது. அவர்கள் இறந்த பிறகு, உறவுகளுக்கும் பெரிய இழப்பாகி விட்டது. இளையராஜா, கங்கை அமரன் குடும்பத்தினர் இங்கு அவர்கள் யாரும் வருவதே இல்லை. யாரையும் பார்ப்பதும் இல்லை. பிறந்த மண்ணுக்கு நிறைய புகழை சேர்த்தவர்கள் அவர்கள்.

அந்த மண்ணின் புகழ் சேர்த்தவர்கள் அவர்கள். அந்த மண்ணின் புகழ் மங்கி போய்விட செய்து விடக்கூடாது. எங்களுக்கு எல்லாம் எதுவும் செய்யாவிட்டாலும், பரவாயில்லை. இங்கு அவர்கள் வந்து போய்க்கொண்டு இருந்தால், அதுவே எங்களுக்கு போதும், என்று இளையராஜாவை குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top