நடிகைகளுடன் நெருக்கம்.. ஏஆர் ரகுமான் சொல்லியும் கேட்காத ஜிவி பிரகாஷ்.. விவாகரத்து காரணத்தை கூறிய பிரபலம்..!

By Mahalakshmi on மே 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு தான். இதை பார்த்த பலரும் இவர்கள் பிரிவுக்கு பல காரணங்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ்.

   

வெயில் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கின்றார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்த இவர் பின்னர் நடிக்கவும் தொடங்கிவிட்டார். ஆனால் நடிகராக பெரிய அளவு ஹிட் திரைப்படங்களை கொடுக்க முடியவில்லை. டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மையம், சிவப்பு பச்சை மஞ்சள் உள்ளிட திரைப்படங்களில் நடித்த இவர் சுமாரான வெற்றியை கொடுத்தார்.

   

 

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கள்வன் மற்றும் டியர் உள்ளிட திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இவர் பள்ளி பருவத்திலிருந்து பிரபல பாடகியான சைந்தவியை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் அன்வி என்கின்ற மகள் பிறந்தார். சைந்தவியும் பின்னணி பாடகியாக சினிமாவில் தற்போது வரை ஜொலித்து வருகின்றார்.

ஜி வி பிரகாஷ் இசையில் ஏராளமான பாடல்களையும் இவர் பாடியிருக்கின்றார். இப்படி ஃபேவரிட் ஜோடியாக வலம் வந்த இவர்கள் நேற்று இரவு திடீரென்று தாங்கள் பிரியப் போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவினை வெளியிட்டு இருந்தார்கள். இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்து வந்தது.

இது குறித்து பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு காரணத்தை தெரிவித்து இருக்கின்றார். “ஜிவி பிரகாஷ் நடிக்க தொடங்கியது முதலில் சாய்ந்தவிக்கும் இவருக்கும் தொடர்ந்து பிரச்சனை வந்துள்ளது. சினிமாவில் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்காமல் போன காரணத்தினால் அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கின்றார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

ஏஆர் ரகுமான் இவர்கள் இருவரையும் அழைத்து சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஜிவி பிரகாஷை அழைத்து ‘குடும்பம் வேறு, தொழில் வேறு.. உனக்கு தான் இசையமைக்க நிறைய படங்கள் வருகின்றது. அதில் கவனம் செலுத்து, ஏன் நடிக்க வேண்டும். இதனால் தான் இப்போது பிரச்சனை வருகின்றது என்று கூறி இருக்கிறார்.

ஆனால் ஜிவி பிரகாஷ் அதை கேட்கவே இல்லை. ஜி.வி பிரகாஷ் நடிக்க வந்ததிலிருந்து சிறு சிறு விரிசல்கள் வந்து கொண்டிருந்தது. பின்னர் இருவரும் பேசி சமாதானமாகிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பெரியதாக ஜிவி பிரகாஷ் வீட்டிற்கு வருவதில்லை. அடிக்கடி வெளியில் தங்கத் தொடங்கியதால் சைந்தவி, ஜிவி பிரகாஷை பிரிவதற்கு முடிவு செய்து இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.