Connect with us

CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஷபானா… வெளியான பர்த்டே வீடியோ…

வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒன்று  சீரியல். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு சில சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது. அதுபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.

 

   

இந்த சீரியல் ஆயிரம எபிசோடுகளை  தாண்டி சாதனை படைத்தது. இந்த சீரியலில் பார்வதியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை ஷபானா. சமீபத்தில் இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், நடிகை ஷபானா தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் ஆர்யன் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில்   எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷபானா மற்றும் ஆர்யன். இந்நிலையில் நேற்று நடிகை ஷபானா  திருமணத்திற்கு பிறகு வரும் தனது கணவரின் முதல் பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக, ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Ssmusic (@ssmusicofficial)

Continue Reading

More in CINEMA

To Top