Connect with us

CINEMA

அந்த டிரஸ்-அ பத்தி பேசுனது ரொம்ப ரொம்ப தப்பு…! பிக் பாஸிற்கு சென்ற தனது மகள் குறித்து முதன்முறையாக பேட்டியளித்த வனிதா…! வைரலாகும் வீடியோ…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

   

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு சென்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் முதல் நாளே செம ட்விஸ்ட்டா இருக்கே என்று கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது. அதன்படி 7 பேர் நாமினேஷன் ஆகியுள்ளனர்.அதில் வனிதாவின் மகள் ஜோவிதாவும் நாமினேட் ஆகியுள்ளார்.இந்நிலையில் மகள் நாமினேட் ஆனது பற்றி வனிதா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.”உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது பேபி” என வனிதா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்த நடிகை வனிதா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மனசால தோத்து போயிட்டோம்னு சில டைம்ல எமோஷனலா பீல் பண்ணி இருக்கேன். ஆனால் என் பொண்ணை நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன். அதேபோல விசித்ரா டிரஸ்-அ பத்தி பத்தி பேசுனது ரொம்ப ரொம்ப தப்பு எனவும் இன்னும் பல விஷயங்களை பற்றி எமோஷனலாக பேசியுள்ளார் வனிதா.  இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top