“2025ல் மட்டும் தரவு மையங்களை குளிர்விக்க… 946 கோடி லிட்டர் காலி…? அமேசான் செய்த பகீர் காரியம்… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!”

Spread the love

அமேசான் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள தனது டேட்டா சென்டர்களைக் குளிர்விப்பதற்காக 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக டேட்டா சென்டர்களின் எண்ணிக்கையும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் தங்களின் தண்ணீர் பயன்பாடு மிகவும் குறைவுதான் என்று அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், அமேசான் நிறுவனம் தனது நீர் பயன்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டில் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.15 லிட்டராக இருந்த தண்ணீர் பயன்பாட்டு அளவு, தற்போது மேலும் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு மத்தியில், குறைந்த அளவு தண்ணீரைத் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, கடுமையான நீர் பற்றாக்குறை நிலவும் பிராந்தியங்களில் தண்ணீரைச் சேமிக்க அமேசான் மாற்று வழிகளைக் கையாண்டு வருகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் பகுதி மற்றும் சவூதி அரேபியா போன்ற வறண்ட பிராந்தியங்களில் உள்ள டேட்டா சென்டர்களில், பாரம்பரியக் குளிரூட்டும் முறைகளுக்குப் பதிலாக தண்ணீரே தேவைப்படாத அல்லது மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் நவீனக் குளிரூட்டும் தொழில்நுட்பங்களை அமேசான் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

Swetha

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

19 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

43 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

1 மணத்தியாலம் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago