நகைச்சுவை நடிகர் யோகி பாபுவா இது!!! சிறுவயதில் எப்படி இருக்கிறார் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரணியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை ராணுவத்தில் ஹவில்தாராக இருந்தார். இதன் காரணமாக வெவ்வேறு இடங்களில் படிக்க நேர்ந்தது.

   

1990ல் ஜம்மு-காஷ்மீரில் படித்தார். அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ என்ற ரியாலிட்டி ஷோவில் உதவிய இயக்குனராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்தார்.

அதை தொடர்ந்தது ஆடவன் கட்டளை, கோலமாவு கோகிலா, மண்டேலா, டாக்டர், லவ் டுடே,   வீரம்,  காக்கி சட்டை,  கிருமி,  டாக்டர்,   போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில்   சுமார் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக  பல  விருதுகளையும் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

நடிகர் யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது தன் சிறுவயதில் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கழுத்தில் மெடல் கையில் கோப்பை மற்றும் சான்றிதழ் இருக்கும் படி அந்த புகைப்படம் அமைந்துள்ளது. தற்போது இந்த புகைப்படமானது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.