ரஜினிகாந்துடன் மட்டும் கிசுகிசு வருவதற்கான காரணம் இதுதானா?.. முதல் முறையாக மனம் திறந்த 80ஸ் நடிகை லதா..!

By Nanthini on சித்திரை 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகர்களில் முக்கியமானவர் எம்ஜிஆர். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள இவர் மூன்று திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியுள்ளார். இந்த மூன்று திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் அதில் 2 படங்களில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை லதா. எம்ஜிஆர் இயக்கிய இரண்டாவது படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தான் இவர் திரைதுறையில் அறிமுகமான முதல் படம் ஆகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து எம்ஜிஆர் உடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த லதா அவரின் கடைசி படமாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்திலும் நடிகையாக நடித்திருந்தார்.

எனக்கு பேர் வச்சதே எம்ஜிஆர் தான்.. சண்டை போட்டு பேட்டி எடுத்தேன் -நடிகை லதா  சொன்ன சுவாரசிய தகவல்..

   

 

   

இந்தத் திரைப்படம் எம்ஜிஆர் முதல்வரான பிறகு வெளியானது. எம்ஜிஆர் அரசியலில் குதித்து முதல்வர் ஆன பிறகு நடிப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து லதா அடுத்த முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். இவர்களுடன் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள லதா மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் மற்றும் லதா பற்றிய கிசுகிசுக்கள் அதிகம் பரவியது. இது தொடர்பாக நடிகை லதா நடித்த ஒரு பேட்டியில், ரஜினியை பொறுத்தவரை ரொம்ப நல்லவர். அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட. அப்போது தான் அவர் திரைத்துறையில் வளர்ந்து வரும் காலம்.

 

THALAIVAR on X: "#Rajinikanth in 21 Movie #ShankarSalimSimon is a 1978  Tamil film is directed by P.Madhavan. It stars Vijayakumar as Shankar,Jaiganesh  as Salim and Rajinikanth as Simon. The music for the

ஆனால் நான் பல படங்களில் நடித்திருந்தேன். எம்ஜிஆர் ஹீரோயின் என அழைக்கப்பட்டவள் தான் நான். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் சூட்டிங் கோவை ஆழியார் டேம் பக்கத்தில் நடந்த போது மஞ்சுளா விஜயகுமார் என்னுடன் இருந்தார். நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குரூப்பில் மாலை நேரத்தில் பிரச்சினை கலந்து வந்து இணைந்து கொள்வார். நாங்கள் பேசிக் கொண்டே ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம். கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வருவோம் அவ்வளவுதான்.

அவர் என்னிடம் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்.. ரஜினி சிறந்த மனிதர்.. நடிகை லதா  சொன்ன விஷயம்! | Actress Latha opens up about her love proposal and Actor  Rajinikanth character - Tamil ...

மற்றபடி கிசுகிசு வர அளவுக்கு எதுவும் இல்லை. ஆனால் அந்த காலத்தில் சும்மாவே எதையாவது சொல்லி விடுவார்கள். அதுபோல ரஜினியும் என்னையும் நினைத்தேன் நிறைய கதை சொல்வார்கள். ஆனால் அதில் ஒன்று கூட உண்மை கிடையாது. ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். இன்று வரை நான் மதிக்கும் நல்ல நடிகரை விட நல்ல மனிதர். இன்றும் அவர் அடக்கமாக இருப்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆர் படத்தின் கால் ஷூட் காரணமாக இல்லாமல் போனாலும் இன்றுவரை எம்ஜிஆர் லதா ஜோடி பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு போதும் என்று லதா அந்த பேச்சில் பேசியுள்ளார்.