ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்.. தளபதி விஜய்க்கு கொடுத்து சூப்பர் ஹிட் ஆக்கிய பாடலாசிரியர் யுகபாரதி..!

By Nanthini on சித்திரை 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ரவி மோகன் என்ற ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன்ராஜ் இயக்கி இருந்தார். ஜெயம் ரவியின் அண்ணன் ஆனால் மோகன் ராஜா இந்த திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த படத்தில் ரிச்சர்ட் செய்த ஒரு பாடலை தான் வித்தியாசமாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து ஹிட் கொடுத்துள்ளார் யுகபாரதி.

yugabhaarathi (@yugabhaarathi) / X

   

இயக்குனர் மோகன் ராஜா சிச்சுவேஷன் சொல்ல ஸ்ரீகாந்த் தேவா ஒரு காதல் பாடலை இசை அமைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாடலாசிரியர் யுகாபாரதியும் உடன் இருக்க, யுகபாரதி கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன் என்று எழுதியுள்ளார். மோகன் ராஜா, வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் டிரெண்டியா வேணும் என்று கூறியுள்ளார். உடனே யுகபாரதி கண்டேன் கண்டேன் என்ற வார்த்தையை தூக்கி விட்டு கோபத்தில் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ என்று எழுதியுள்ளார். அப்படி சில வார்த்தைகளை மட்டும் மாற்றி பட்டி டிக்கரிங் செய்து இந்த பாடலை கொடுத்துள்ளார்.

   

@thinkmusicindia's video Tweet

 

இந்த பாடல் மோகன் ராஜாவுக்கு மட்டுமல்ல ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் மிகவும் பிடித்துப் போனது. மேலும் இந்த பாடலும் வெளியாகி இளம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக மாறியது. காலம் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் பேவரைட் பாடலாக இருந்து வருகிறது. இந்த பாடலை யுகபாரதி எழுதிய அதே நாள் மாலை வித்தியாசமாக யுகபாரதிக்கு கால் பண்ணி ஏதாவது பாட்டு பல்லவி வச்சிருக்கியா என்று கேட்டுள்ளார். இருக்கே என்று சொல்லி அந்த தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வந்த மதுர படத்திற்கு கண்டேன் கண்டேன் உன் கண்கள் நான் கண்டேன் என்ற பாடலை கொடுத்துள்ளார்.

அவர் எதிர்பார்த்தது போல அந்த பாடல் வரிகள் இருந்ததால் வித்தியாசாகர் ஷாக் ஆகிவிட்டார். இந்த பாடலும் தளபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. இந்த இரண்டு பாடல்களை இப்போது கேட்டாலும் ஒரே மாதிரியான தாக்கம் தான் இருக்கும். அதற்கு காரணம் இரண்டு பாடல்களுமே ஒரு சில வார்த்தைகளை மட்டுமே மாற்றி பசி டிக்கரிங் செய்த பாடலாகும். ஆனால் தனியாக கேட்டால் யாராலும் இதனை கண்டுபிடிக்க முடியாது. இந்த தகவலை யுகபாரதி சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.