1985 ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவான தென்றலே என்னை தொடு படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜெயஸ்ரீ. இவரின் பாட்டி கே. ஜெயலட்சுமி அந்தக்காலத்து நடிகை ஆவார். ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் பள்ளியில் தான் படித்தார் ஜெயஸ்ரீ. ஹேமமாலினியின் நடனப்பள்ளியில் பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார்.இவருக்கு நன்றாக படித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, ஆனால் சினிமா வாய்ப்பு வர கல்லூரியையும், சினிமாவையையும் தொடர்ந்து வந்தார்.
தென்றலே என்னை தொடு ஹிட்டாகவும் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ரஜினி நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படம் கூட இவருக்கு தான் முதலில் வந்தது, அதில் நடிக்க அட்வான்ஸ் கூட வாங்கிவிட்டார். ஆனால் அந்த சமயத்தில் திருமணம் நிச்சயம் ஆனதால் அவரால் நடிக்க முடியாமல் பின்வாங்கி விட்டார். 1988 ஆம் ஆண்டு சந்திரசேகர் என்ற வங்கி அதிகாரியை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்கா சென்றார். அங்கு சென்று மேல்படிப்பு முடித்து ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சினிமாவே வேண்டாம் என திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன ஜெயஸ்ரீ, இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். அதுமட்டுமல்ல அமெரிக்காவில் மாடித்தோட்டம் வைத்து அதை பராமரித்து வருகிறார். இப்போதும் 80 களில் உள்ள நடிகர்கள் கலிபோர்னியா சென்றால் ஜெயஸ்ரீயை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். திருமணம் செய்யாமல் நடித்திருந்தால், ஒரு பெரிய நடிகையாக வளம் வந்திருப்பேன்.
ஆனால் என் விதியில் அது இல்லை என கூறியிருந்தார் நடிகை ஜெயஸ்ரீ. நான் அமெரிக்காவில் இருக்கேன்னா அங்கே எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்ப்பாங்க. யாருமே வெளில இருக்க மாட்டாங்க. நாம தனிமையில் இருக்க பழகிட்டா நாம எந்த ஊர்லயும் இருக்கலாம். கமல் சாரோட நடிக்க முடியலேன்னு கஷ்டமா இருந்துச்சி என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.