சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று பிரபல காமெடியனாக வெற்றி பெற்ற தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு தொலைக்காட்சி மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் காரணமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மெரினா படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 50 கோடி வசூல் செய்த படமா மான் கராத்தே படம் அமைந்தது.
அதன் அடுத்து இவருடைய ரெமோ படம் 25 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் நடிகர்தான் சிவக்கார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்துவிட்டார்.
சிவகார்த்திகேயனுக்கு கடந்த வருடம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்றே சொல்லலாம். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான், தீபாவளிக்கு வெளியான அமரன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து வெற்றியை குவித்தது. குறிப்பாக அமரன் படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
அடுத்து எஸ் கே 23வது படம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தின் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது சுதா கொங்கராவின் இயக்கத்தில் 25வது படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே. இந்நிலையில் SK சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஹிந்திப் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுக்கள் நடந்து வருகிறது. இந்த படத்தை அமீர்கான் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தியில் ஒரு படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.