சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் அண்ணாமலையை ஷோரூம் இன் ஓனராக ஆக்கிவிட்டார் முத்து. அது ரோகினிக்கும் மனோஜ்க்கும் விஜயாவுக்கும் பிடிக்கவில்லை. பணத்தை எப்படியாவது ரெடி செய்து அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று முழு பிரஷரை ரோகினி மேல் போடுகிறார் விஜயா. அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் மனோஜம் ரோகிணியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். எப்படியாவது பணத்தை கொண்டு போனவன கண்டுபிடிச்சு பணத்தை வாங்கணும். வாங்கி வீட்ல கொடுத்தா தான் மரியாதை கிடைக்கும் அப்படின்னு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக கார் செட்டில் முத்துவும் அவரது நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சவாரியும் வரவே மாட்டேங்குது இப்படி நிலைமை போனா என்ன செய்வது என்று பேசுகிறார்கள். அப்போது அடுத்ததாக நம்ம டிரைவிங் ஸ்கூல் ஒன்னு ஆரம்பிக்கலாம் என்று புது தொழிலுக்கு பிளான் செய்தார்கள்.
அங்கு வந்த மீனாவும் அதை பாராட்டுகிறாள். நல்ல ஐடியா தான் அப்படியே பண்ணுங்க என்று கூறி டூவீலர் ஃபோர் வீலர் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சு எல்லாருக்கும் கத்துக்கொடுங்க இது நல்ல தொழில் தான் அப்படின்னு சொல்லுகிறார். அதுக்கு இடத்தை நம்ம பாக்கணும் ஒரு அட்ரஸை போட்டு நம்ம ஆஃபீஸில் சின்னதா போடணும் என்று பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக பணத்தை தூக்கிட்டு ஓடியவனை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் முத்து.
வீட்டில் விஜயாவிடம் ரோகினி மாட்டிக்கொண்டு முழிக்கிறாள். விஜய் ரோகினியிடம் கத்துகிறார். நீ பணத்தை எப்பதான் ரெடி பண்ணி கொடுக்க போறீங்க மலேசியால உங்க அப்பாட்ட பேசி வாங்கி தர வேண்டிய தானே என்று கேட்கிறார். உடனே ரோகினி அப்பா ஜெயில்ல இருக்காங்கனு சொல்லும் போதே விஜய எத்தனை நாட்கள் இதையே சொல்லுவ. அதான் உன் சொந்தக்காரங்க எல்லாம் இருப்பாங்க இல்ல வேற யார்கிட்டயாவது ரெடி பண்ணி கொடுத்துட்டு அப்புறமா உங்க அப்பா வெளியே வந்த உடனே கொடுத்துட வேண்டியதுதானே என்று கூறுகிறார்.
ரோகினி ஒரு தப்பை மறைக்க மேலும் மேலும் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக கூறிய பொய் என்னவென்றால் என்னுடைய சொந்தக்காரங்க கிட்ட சொல்லி என் அப்பா கிட்ட பேச சொல்லி இருக்கேன் என்று கூறினார். அப்ப நீ உங்க சொந்தக்காரங்க கிட்ட காசு வாங்கி விட வேண்டியது தானே என்று விஜயா கேட்கிறார். அதுக்கும் ஒரு பொய் கூறுகிறார் ரோகினி. என் சொந்தக்காரங்க எல்லாம் எந்த அளவுக்கு வசதியானவங்க கிடையாது அவங்களால இவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்று கூறுகிறார்.

அடுத்ததாக வீட்டிற்கு முத்து மீனா வருகின்றனர். வந்ததும் அண்ணாமலையை கூப்பிட்டு நான் விசாரிச்சுட்டு இருக்கேன் பா இப்பதான் அவனை பத்தி கொஞ்சம் கொஞ்சமா தெரியுது. அவனை பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டா எங்க இருக்கான்னு அடுத்ததா கண்டுபிடிக்கணும் என்று கூறுகிறார். உடனே மனோஜ் எனக்கு என் பணம் சீக்கிரமா வேணும் இவன் தூக்கிட்டு ஓடிர மாட்டானா என்கிறார். உடனே முத்து நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது அடுத்தவங்களை ஏமாத்தி பணத்தை தூக்கிட்டு போகவும் மாட்டேன் என் பணத்தை யார்கிட்டயும் கொடுத்து நான் ஏமாறவும் மாட்டேன்.
இவளுக்கு நக்கலா பாத்தீங்களா அப்பா இவன் பணத்தை எங்கேயாவது ஏமாந்துட்டு வருவான் நாங்க கண்டுபிடித்து கொடுக்கணும் உன் வார்த்தைக்குதாம்பா நானும் மீனாவும் வேலைய விட்டுட்டு தேடிக்கிட்டு இருக்கோம் இவனுக்காக எல்லாம் இல்லை என்று திட்டி விட்டு செல்கிறார். உடனே மறுபடியும் விஜயா ரோஹிணியை பிடித்து விடுகிறார். எல்லாம் உங்களால தான் எனக்கு இந்த அவமானம் எல்லாம் பணத்தை திருப்பி கொடுக்கற வரைக்கும் முத்துவும் மீனாவும் நம்மளை அவமானப்படுத்திக்கிட்டே இருப்பாங்க சீக்கிரம் ஏதாவது ஒரு வழியில் பணத்தை ரெடி பண்ணி குடுங்க என்று கூறுகின்றார். ரோகினி முழித்துக் கொண்டு இருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
