இந்தியாவில் வகுப்பறைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த 8 வயது சிறுமிக்கு, ஆசிரியர் ஒருவர் கனமான பள்ளிப் பையை முதுகில் சுமந்தவாறே 100 முறை தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை அளித்துள்ளார். இந்த மிதமிஞ்சிய உடற்பயிற்சித் தண்டனையைத் தாங்க முடியாமல் சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அச்சிறுமி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமியின் பிஞ்சு இதயம் இந்த அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் போகவே, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/everything11_/status/2096316201794412725/video/1
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்கு அளிக்கப்பட்ட இந்த கொடூரமான தண்டனையும், அதன்பின்னரான அவரது மறைவும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக,…
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி நிகழ்வில் பங்கேற்ற அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய…
சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் பருவமழை முன்னெச்சரிக்கை குறைபாடுகளால் மழைநீர் புகுந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்புகள்…
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது அக்டோபர் 30 அன்று புது தில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில்…