அட கொடுமையே… 10 நிமிடம் தாமதமானதால் கொடூர தண்டனை… வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து… 8 வயது சிறுமி பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!

By Swetha on புரட்டாதி 7, 2026

Spread the love

இந்தியாவில் வகுப்பறைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த 8 வயது சிறுமிக்கு, ஆசிரியர் ஒருவர் கனமான பள்ளிப் பையை முதுகில் சுமந்தவாறே 100 முறை தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை அளித்துள்ளார். இந்த மிதமிஞ்சிய உடற்பயிற்சித் தண்டனையைத் தாங்க முடியாமல் சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அச்சிறுமி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமியின் பிஞ்சு இதயம் இந்த அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் போகவே, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

https://twitter.com/everything11_/status/2096316201794412725/video/1

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்கு அளிக்கப்பட்ட இந்த கொடூரமான தண்டனையும், அதன்பின்னரான அவரது மறைவும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.