சக மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தால் 8 பேருடைய கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியில் உள்ளது அங்கு தங்கிருந்த மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் எட்டு பேருக்கு நேற்று காலை எழுந்தபோது கண் திறக்க முடியாமல் எரிச்சலால் வலியில் துடித்துள்ளார்கள். இதனை அடுத்து விடுதிக்காப்பாளர் மாணவர்களின் கண்களை ஆய்வு செய்ததில் பசை ஓட்டப்பட்டு இருந்தது. அப்போது விடுதியில் தங்கி இருந்த சக மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தால் இந்த சம்பவம் அரங்கே அரங்கேறி இருப்பது தெரிய வந்தது.
இரவு அனைவரும் உறங்கிய பிறகு எட்டு பேரும் கண்களில் சக மாணவர்கள் பசையை பூசி இருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய கண்கள் பாதிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர்களுடைய கண்பார்வை முழுவதும் பறிபோகாமல் காப்பாற்ற ப்பட்டது. ஒருவர் மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
