அண்ணா.. அண்ணா.. என எல்லோரும் சொல்வாங்க… ஆனா அவருக்காக அதிமுக தான்… சசிகலா சொன்ன விஷயம்..!!

By Soundarya on புரட்டாதி 15, 2025

Spread the love

அண்ணா உருவப்படத்திற்கு சென்னை போயஸ் கார்டனில் சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர், “அண்ணாவின் எண்ணங்களை எம்ஜிஆர் ஜெயலலிதா நிறைவேற்றினார்கள். அண்ணாவுக்கு சிலை வைத்தவர் எம்ஜிஆர். 1995 வருடம் அண்ணாவின் புத்தகங்களை ஜெயலலிதா அரசுடமையாக்கினார். அண்ணா அண்ணா என எல்லோரும் சொல்வாங்க. ஆனா அவருக்காக எல்லாமே செய்தது அதிமுக தான். இன்று அரசாங்கம் இதை செய்கிறேன் ,அதை செய்கிறேன் என்று வாய்ஜாலம் போடுகிறது. முதலமைச்சர் வெளிநாட்டுக்கு பயணம் சென்றார்.

17,000 பேருக்கு வேலைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். எனக்கு தெரிந்த விதத்தில் 89 சதவீதம் ஏற்கனவே இங்கு இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம் தான். 11% தான் புதியது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளித்துறை முடங்கி போயிருக்கிறது. இதனால் 32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை முதலில் முதலமைச்சர் சரி செய்ய வேண்டும். அரசு நிதி இழப்பீடுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் வீண்” என்று கூறியுள்ளார்.