“பார்க்கத்தான் ஸ்கூல் மாதிரி…” ஆனா உள்ளே சென்று பார்த்தா…!! உரிமையாளரின் செயலால் ஆடிப்போன போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் மஹபூப் நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் குருவரெட்டி என்பவர் உடன் இணைந்து போதை பொருள் தயாரிக்க திட்டமிட்டார். அதற்காக தனக்கு சொந்தமான தனியார் தனியார் பள்ளியின் ஒதுக்குப்புறமான பகுதியில் போதை பொருட்களை தயாரித்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனியார் பள்ளி வளாகத்திற்குள் சட்ட விரோதமாக ஒதுக்கு புறமான இடத்தில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் தயாரிப்பு ஆலையை கண்டுபிடித்தனர். பின்னர் 21 லட்ச ரூபாய் பணம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.