“காதலுக்கு கண்கள் இல்லை மானே” 79 வயது காதலனை கரம் பிடித்த 75 வயது காதலி… சந்தோசமாக நடத்தி வைத்த அரசு அதிகாரிகள்..!!

By Soundarya on ஆடி 10, 2025

Spread the love

காதல் எப்பொழுது வரும் என்பது தெரியாது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் தான் சாட்சி. கேரளாவில் ராமவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன்( 79) சுலோச்சனா (75) ஆகியோர் வசித்து வந்துள்ளார்கள். 2019 முதல் வசித்து வரும் விஜயராகவனும்,  2024 முதல் சுலோச்சனாவும் சந்தித்துள்ளார்கள் . காலப்போக்கில் அவர்களுடைய நட்பு ஆழமாகி பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. பிறகு தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பி உள்ளார்கள்

இதனை அடுத்து அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் இனிதே நடந்துள்ளது. கேரளாவின் உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து நகர மேயர் எம்கே வர்கீஸ் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ்  இந்த ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. மேலும் இதுகுறித்து  டாக்டர் பிந்து கூறுகையில் “இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.