சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தன் கணவருடன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது கோவில் பூசாரியான அசோக் பாரதியுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் தனது குடும்ப பிரச்சனை குறித்து அவர் அடிக்கடி அவருடன் கலந்து பேசி வந்துள்ளார். இப்படியான நிலையில் குடும்ப பிரச்சனைக்கு காரணமான தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மாலை வாங்கி தருகிறேன், இதனால் உன் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்று பூசாரி அசோக் பாரதி ஆசை வார்த்தைகளை கூறி இளம்பெண்ணை மயக்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் இளம்பெண்ணை வடபழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்ற நிலையில் மதிய நேரத்தில் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் அருகில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருந்த போது கோவில் பூசாரி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குடும்ப பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி கோவில் பூசாரி இதுபோன்ற படுபயங்கரமான செயலை கண்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக் பாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இளம்பெண்ணுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இளம் பெண்ணின் கணவர் தன்னை தாக்கி செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக பூசாரி அசோக் பாரதி வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வளத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
