தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சமீபத்தில் கோவையில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவி இடம் பாலியல் ரீதியாக அத்துமீரலில் ஈடுபட்ட 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் 72 வயது முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன மாணவி தன்னுடைய பள்ளியின் ஆசிரியர்களிடம் இது பற்றி அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் இது பற்றியும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்துள்ளனர். விஜயகுமார் என்ற 72 வயது முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி,…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப்…