தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டணி இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இருந்தாலும் அதிமுக தரப்பிலிருந்து தொடர்ந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றி கழகம் இருக்காது. தியேட்டர்கள் எல்லாம் திமுக கைகளில் இருப்பதால் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. மக்களின் நலனுக்காகவும் என்னை நம்பி வந்த தொண்டர்களின் நலனுக்காகவும் மத்திய அரசுடன் கூட்டணியாக இணைந்து செயல்படுகிறேன் என்று எம்ஜிஆர் முடிவெடுத்து செயல்பட்டதை விஜய் எண்ணி பார்க்க வேண்டும் என்று கூறி அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…
குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். மாற்று…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே…
ரயிலில் பயணம் செய்த போது, ஒரு நபர் தன்னைத் தொடர்ந்து தவறான முறையில் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தப் பெண்…