70ஸ் இளசுகளின் கனவு நாயகன் புற்றுநோயால் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

பிரபல ஹாலிவுட் நடிகரும் பாப் பாடகருமான பாபி ஷெர்மான் (81) காலமானார். புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெரும் அவதிப்பட்டு வந்தார். இப்படியான நிலையில் புற்றுநோய் பாதிப்பால் அவருடைய உயிர் பிரிந்ததாக அவர் மனைவி தெரிவித்துள்ளார். 60 மற்றும் 70 காலகட்டங்களில் இளைஞர்களின் ஸ்டைல் நாயகராக வலம் வந்த பாபி, Easy come, Easy Go “You make Me happy” என அடுத்தடுத்து ஹிட் பாடல்கள் கொடுத்து டாப் சார்ட்டில் இடம் பிடித்தவர். இவரை அன்றைய ஜஸ்டின் பெய்பர் என்கின்றனர். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.