புதிய AI கண்ணாடியை அறிமுகம் செய்த மெட்டா.. இதுல இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா..?

By Nanthini on ஆனி 26, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருள்களிலும் வித்தியாசம் காட்டப்படுகிறது. அதன்படி தற்போது Oaklcy என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து AI கண்ணாடியை மெட்டா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்க உள்ளது. இந்த AI கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான கேமரா, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளது.

வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை 34 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியை ஒரு முறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.