சிட்டிங் எம்எல்ஏக்கள் 70 பேருக்கு ஆப்பு…. அறிவாலயம் எடுத்த அதிரடி முடிவு… ஆக்ஷனில் இறங்கிய ஸ்டாலின்…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. எப்படியாவது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.

அடுத்தடுத்த பல அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகின்றார். இதனிடையே ஆளும் கட்சியான திமுகவில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் போட்டியிட்டவர்களில் 90% பேருக்கு 2021 ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டு திமுக 125 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.

   

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ரகசிய சர்வே நடத்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் பெரும்பாலானோருக்கு சீட் மறுக்கப்படும் என திமுக வட்டாரம் தெரிவிக்கிறது. அதே போன்று, திமுகவில் சீனியர்களாக உள்ள  துரைமுருகன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர், பொன்முடி, ரகுபதி, காந்தி என பலருக்கும்  மீண்டும் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்படாது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.