மேற்குவங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் வியூக அமைப்பாளர் I-PAC அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் வீட்டில் ED காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல்களில் TMC வெற்றியில் I-PAC முக்கிய பங்காற்றியது.
இந்நிலையில் சோதனையின் போது பிரதீக் ஜெயின் வீட்டுக்கு மம்தா பானர்ஜி திடீரென நேரில் சென்றதும், ஏதோ பைலுடன் வெளியே வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
