கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் வைத்து பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளார். இதனால் திடீரென ஆறு மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்கள் தற்காப்புக்காக உபயோகப்படுத்தும் பெப்பர் ஸ்பிரேயை வீட்டில் இருந்து எடுத்து வந்த மாணவன் விளையாட்டாக வகுப்பறையில் வைத்து அடித்துள்ளார். அப்போது மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் வகுப்பு முழுவதும் பரவி மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
