தெலுங்கானா மாநிலம் சூரிய பேட்டை பகுதியில் நரசம்மா என்ற மூதாட்டி வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நரசம்மா உயிரிழந்தார். அவரது மகள்கள் 12 லட்ச ரூபாய் பணம், 10 பவுன் தங்க நகைக்காக சண்டை போட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக நரசமாவின் உடலை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து சடங்குகள் செய்ய விடாமல் தடுக்கின்றனர். உறவினர்கள், நண்பர்கள் என யார் தலையிட்டாலும் இரண்டு மகள்களும் பேசி முடிவெடுக்கவில்லை.
பணம் மற்றும் தங்கத்தை பிரித்துக் கொடுத்த பிறகுதான் இறுதி சடங்குகள் நடத்தப்படும் என பிடிவாதமாக உள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற இரண்டு மகள்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கி நீங்கள் இறுதி சடங்கு செய்யாவிட்டால் நாங்களே இறுதி சடங்கு செய்து விடுவோம் என எச்சரித்து போலீசார் அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு தான் இறுதி சடங்கு செய்ய மகள்கள் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம்
அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
