புதுக்கோட்டை மாவட்டம் தீர்த்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். விவசாயியான தேவதாஸ் ஒரு நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான ஜாஸ்மின் பானு பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
சில நாட்கள் கழித்து தேவதாஸ் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து மீதமுள்ள பணத்தை தீபாவளி முடிந்த பிறகு தருவதாக கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஜாஸ்மின் பானு பணத்தை வாங்கி தனது பாக்கெட்டில் வைத்ததை தேவதாஸ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஜாஸ்மின் பானுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
