கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எவ்வித வெளிப்படையான விளக்கமும் இன்றி மக்கள் பிரதிநிதிகள் திடீரென ராஜினாமா செய்வது, அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் மற்றும் அவமதிப்பு என்று அவர் சாடியுள்ளார்.
பதவி விலகிய பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்வதாக வெளியாகும் தகவல்களால், கார்த்தி சிதம்பரத்தின் இந்த விமர்சனம் மறைமுகமாக தவெக-விற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் மிக முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸில் இருந்தே இந்த எதிர்ப்பு குரல் எழுந்துள்ளதால், இது முதலமைச்சர் விஜய்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
