புதிய கேஸ் இணைப்பு பெறுவதை எளிதாக்க பிபிசிஎல் ‘பாரத் லைட் ஜிப்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-க்குள் 24 மாநிலங்களில் உள்ள 100 நகரங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட உள்ளது. அதேபோல, ஹெச்பிசிஎல் நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் 10 கிலோ ‘ஹெச்பி நவ்யா’ மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர்களை சில நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி செய்யும் சேவையை பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானியச் சுமையைக் குறைக்க, இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும், வரம்பை மீறினால் சாதாரண விலையிலேயே வாங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் மாற்றமில்லாத நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கமர்ஷியல் சிலிண்டர் விலை ரூ. 170 முதல் ரூ. 182 வரை குறைக்கப்பட்டுள்ளது.
பைப்லைன் கேஸ் இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள் பழைய LPG இணைப்பைச் சரண்டர் செய்துவிட்டு ‘டிரான்ஸ்ஃபர் வவுச்சர்’ பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே கேஸ் புக்கிங் செய்ய முடியும். டெலிவரியின் போது மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கூறினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் புக் செய்ய நகரவாசிகளுக்கு 25 நாட்களும், கிராமப்புற மக்களுக்கு 45 நாட்களும் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
