தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்தத் தகவல், தவெக அரசை வீழ்த்த திமுக தீவிரமடைந்துள்ளதை வெளிச்சம்பிடித்துக் காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் இலக்காக்கப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள திமுக தலைமை, தற்போதைய ஆட்சியைக் கவிழ்ப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன்’ ஒன்றைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதன் பகுதியாக, தவெக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க தலைக்கு 50 “ஸ்வீட் பாக்ஸ்கள்” எனப் பேரம் உயர்த்தப்பட்டு ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் செந்தில் பாலாஜி சட்டப் போராட்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், திமுகவின் இந்த அதிரடி நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்ட பதற்றத்தையும் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
