Connect with us

GOAT படத்தின் என்ட்ரியே விஜயகாந்த் தான்.. பிரேமலதாவுக்கு படக்குழு கொடுத்த சன்மானம்.. எவ்வளவு தெரியுமா..?

CINEMA

GOAT படத்தின் என்ட்ரியே விஜயகாந்த் தான்.. பிரேமலதாவுக்கு படக்குழு கொடுத்த சன்மானம்.. எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அர்ச்சனா கல்பத்தி தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

   

படத்தில் இருந்து ரிலீஸ் ஆன மூன்று படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல் ஆனது. வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.ஏனென்றால் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

   

 

இதனால் விஜய் நடிக்கும் கோட் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலம் கோட் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், அர்ச்சனா கல்பத்தி, வெங்கட் பிரபு ஆகியோர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களுடன் எடுத்துக்கொண்டு ஃபோட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இப்போது வந்த தகவலின் படி கோட் திரைப்படத்தில் முதல் காட்சியிலேயே விஜயகாந்த் வருவது போல படத்தை உருவாக்கியுள்ளார்களாம். முதல் காட்சியே அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த்தை படத்தில் பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக அர்ச்சனா கல்பாத்தி பிரேமலதா விஜயகாந்த் 50 லட்சம் ரூபாய் பணத்தை சன்மானமாக கொடுத்தாராம். அதற்காகத்தான் அன்றைய சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிகிறது. கோட் படத்தின் புதிய அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
Priya Ram
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top