NEWS
உங்க ஆதார் கார்டு உங்களுக்கு தெரியாம தவறா பயன்படுத்தப்படுகிறதா?.. இதோ நீங்களே கண்டறிய எளிய வழி..!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். நாம் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிக் கொண்டிருப்போம்.
ஆனால் ஆதாரில் சரியான செல்போன் நம்பர் இருந்தால் மட்டுமே எந்த ஒரு அப்டேட்டையும் மேற்கொள்ள முடியும். எனவே அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதார் கார்டில் பெயருடன் முகவரி தொடங்கி அனைத்து தகவல்களும் இருப்பதால் தவறானவர்கள் கைகளில் சிக்கினால் தவறாக பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும். இந்த பிரச்சினையை தவிர்க்க உங்களுடைய ஆதார் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
- இதற்கு முதலில் நீங்கள் UIDAI என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் சேவைகளின் கீழே அங்கீகார வரலாற்றின் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட்டு பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு sent OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை சமர்ப்பிக்க வேண்டும்.
- பின்னர் உங்களுக்கு ஆறு மாத தகவல் கிடைக்கும். இதில் உங்களுடைய ஆதார் கார்டு எங்கு எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
- ஒருவேளை உங்களுடைய ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீங்கள் கருதினால் தாமதிக்காமல் 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் அளிக்கலாம்.