CINEMA
நெப்போடிச வலையில் சிக்காத அஜித்… தமிழ் சினிமாவில் வலம் வரும் நெப்போ கிட்ஸ்…
நெப்போ கிட்ஸ் என்ற வார்த்தையை பரவலாக நாம் கேட்டிருப்போம். இது இந்திய சினிமாவில் பொதுவான ஒன்று. அந்த நெப்போ கிட்ஸ்களுக்கு மத்தியில் தனது திறமையால் முன்னேறி வந்தவர்களும் உண்டு. அப்படி தனது திறமையால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் அஜித்குமார். நெப்போ கிட்ஸ் இருந்தாலும் அவர்களை தாண்டி சாதித்துள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் யாரெல்லாம் நெப்போ கிட்ஸ் ஆக இருந்து வருகிறார்கள் என்பதை இனி காண்போம்.
1. விஜய்: இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் மகனாவார். குழந்தை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி தனது 17 வயதில் நாயகனாக நடிக்க ஆரம்பித்து இன்று உச்சபட்ச நடிகராக இருந்து வருகிறார்.
2. பிரசாந்த்: பழம்பெறும் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்களின் மகன் தான் பிரசாந்த். பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனது 17 வது வயதில் கோடை விடுமுறையில் நடிக்க வந்தவர் பிரசாந்த். 1990 காலகட்டத்தில் சாக்லேட் பாயாக மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர்.
3. அருண் விஜய்: மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன்தான் அருண் விஜய். 90களில் சினிமாவில் நுழைந்த அருண் விஜய் அவர்களுக்கு பெரிய ப்ராஜெக்ட்கள் ஒன்னும் கிடைக்காத போதிலும் சமீபத்திய நாட்களில் நல்ல நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய்.
4. சூர்யா: பழம்பெரும் முன்னணி நடிகரான சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா. இவரும் தனது 22 வது வயதில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.
இவர்கள் அனைவரும் அஜித்குமார் அவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இவர்களும் நுழைந்து தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். இவர்கள் அல்லாமல் சிலம்பரசன், தனுஷ், ஜெயம் ரவி, அதர்வா, முரளி, அதிதி சங்கர், ஜீவா, விக்ரம் பிரபு போன்றோரும் நெப்போ கிட்ஸ் ஆக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.