5 வயது சிறுமியை கழுத்தறுத்து, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சித்தி.. குலைநடுங்க வைக்கும் பின்னணி…!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து வயது சிறுமியை கழுத்தறுத்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொருட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதி ராமு மற்றும் ரவீனா. இந்த தம்பதியின் ஐந்து வயது மகள் ஹரிஸ்டா. இவர் கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியை காணச் சென்ற நிலையில் போட்டி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த பெற்றோர் ஊர் முழுவதும் தேடிய நிலையில் இரவு 10 மணிக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு போலீசார் வந்து தேடிய நிலையில் அருகில் விஜய் என்பவரின் வீட்டில் குளியல் அறையில் இருந்து சிறுநீர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிறகு விஜயை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வீட்டில் இல்லை என்றும் எப்போதாவது தான் வீட்டிற்கு வந்து செல்வதாகவும் கூறியுள்ளார். பிறகு சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமியின் சித்தப்பா மனைவி மமதா மீது போலீ சாருக்கு சந்தேகம் வர அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் ஆன்லைன் சூதாட்டம், பிட்காயின் முதலீடு செய்தது 25 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் இறந்தது தெரிய வந்தது. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால், தனது கணவனின் அண்ணன் மனைவி நவீனா தொடர்ந்து அவமானப்படுத்தியுள்ளார்.

   

இதனால் அவரை நேரம் பார்த்து பழிவாங்குவதற்காக சதி திட்டம் தீட்டி அவரது மகளை ஆளில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து மயக்கம் அடைய செய்து பிறகு ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியும் மாத்திரம் தீராமல் தயாராக வைத்திருந்த பெரிய கட்டரை பயன்படுத்தி சிறுமியின் தலையை துண்டித்ததாக கூறி அவர் அனைவரையும் அதிர வைத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.