பெண்களுக்கான திட்டம்..! உங்கள் பெயரில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்… தமிழக அரசின் திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

By Soundarya on புரட்டாதி 6, 2025

Spread the love

பெண்களே, உங்களுடைய பெயரில் நிலம் இல்லையா? இனி கவலை வேண்டாம். தமிழக அரசு உங்களுக்காக சூப்பரான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடையும் விதமாக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக “நன்னிலம் மகளிர் நில உரிமை திட்டம் உள்ளது. நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளை நிலமுடையவர்களாக மாற்றுவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியம் மற்றும் கடன் வசதி பெறுகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு எந்த விவசாய நிலமும் சொந்தமாக இருக்க கூடாது. 18-55 வயதுக்குள் இருக்கும் பெண்கள் https://newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.