8 மாதத்திற்கும் முன் காணாமல் போன இளம் பெண்.. காதலன் செய்த கொடூரச் செயல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

ஒடிசா மாநிலம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலனை நம்பி சென்றாய் இளம் பெண். கொலை செய்து ஒன்னும் தெரியாதது போல் சுரங்கத்தில் காதலியின் உடலை தூக்கி எறிந்த காதலன். ஒடிசா, பூபவனேஸ்வரை சேர்ந்த நிரூபமா பரிதா(22) இவர் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சொந்த ஊரான ரன்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு காணாமல் போய்விட்டார். பல மாதங்களாகவே குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நிரூபமாவின் செல்போன் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. காவல்துறையினர் இதை ஆதாரமாக வைத்து விசாரித்து வந்ததில் தேபாசிஸ் பிசோய் என்பவர்தான் நிரூபமாவை கொலை செய்தது கண்டுபிடித்துள்ளார்கள். காதலியை கொலை செய்து உடலை சுரங்கத்தில் தூக்கி வீசி உள்ளார். மேலும் காதலியின் செல்போன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுத்துள்ளார். அவர் மாட்டிக் கொள்வதற்கு காரணமே அந்த செல்போன் தான்.