சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமான சூர்யா கிரண் காலமானார்.. திரை உலகமே அதிர்ச்சியில்.. 49 வயதில் மரணித்தது எதனால்.?

By Ranjith Kumar

Published on:

80 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த தற்போது பிரபல நடிகராக இருப்பவர் தான் “சூர்யா கிரண்”. இவர் பாண்டியன் ஸ்டோரில் மூத்த அண்ணியாக நடிக்கும் சுஜாதாவின் அண்ணன் ஆவார். இவரின் உண்மையான பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ் என்றும் பெயரை சினிமாவிற்காக சூர்யா கிரண் என்று மாற்றி கொண்டார். இவர் தெலுகு, மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து தற்போது பிரபலமாக இருந்து வருகிறார்.

இவர் ரஜினி, சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்ற பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்தின் குழந்தையை கதாபாத்திரத்தில் நடை, உடை, பாவனை என்று தனது ஸ்டைல் மூலமாக ரஜினி போலவே அப்படியே வெளி காமித்து மிகப் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார். அதன் பின்னதாக இவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு ரவிதேஜா மற்றும் கமல்ஹாசன் இருவரிடமும் திரைக்கதை எழுதுவதும், இயக்கத்தையும் கற்றுக்கொண்டு, முதல் முதலில் தெலுங்கில் “நிஜாம் தேடு செஜாபாலி” என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

   

அதன்பின்னதாக 51, அத்தியாயம் 6, ராஜு பாய், பிரம்மாஸ்திரம் போன்ற படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வந்தார். அதற்கு அடுத்ததாக இவர் இயக்கும் எந்த படங்களும் சரியாக போகாமல், 2003 ஆம் ஆண்டு சுமந்த் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளி வந்த சத்தியம் படம் மூலம் மீண்டும் நடிப்பு துறைக்கு வருகை தந்தார். அதன் பின்னதாக சினிமா துறையை விட்டுவிட்டு சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்த காவேரி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக பயணித்துக் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் சிறு பிளவு ஏற்பட்டு காவேரிக்கும் இவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னதாக நீண்ட வருடம் கழித்து இவர் தெலுகு பிக் பாஸில் கலந்துகொண்டு மீண்டும் பிரபலமான ஒருவராக இருந்தார். இந்த நிலையில் சூர்யா கிரண் இன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது 49 வயதாகிய இவர் திடீரென காலமானதை கண்ட திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

author avatar
Ranjith Kumar