“அம்மா, அக்கா கண்முன்னே துடிதுடித்து முடிந்த 4 வயது சிறுவனின் உயிர்”… சாலை விபத்தில் நிகழ்ந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (32), திங்கள்கிழமை மாலை தனது 4 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் மொபெட்டில் பாளையங்கோட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பொன்னாக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது மொபெட் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன், துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். காயமடைந்த தாய் மஞ்சுளா மற்றும் அவரது 7 வயது மகள் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“வகுப்பை ஒழுங்கா கவனிங்க தம்பி”… “1 மணி நேரத்துல ஓடிப்போனா எப்படி தெரியும்?”…. உதயநிதியை நக்கலடித்த தவெக அமைச்சர்…!

தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே, எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வரும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அரசின்…

14 minutes ago

1,200 கி.மீ தொலைவில் தொலைந்த முதியவர்… ஒரே ஒரு வார்த்தையை வச்சு தூக்கிய ChatGPT… பீகார் இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான சமன் லால், தீவிர ஞாபக மறதிப்…

22 minutes ago

“என்னை காப்பாத்துங்க”…. ஓடும் லாரியில் கதறியபடி 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட காவலர்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்வத் பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவலரை லாரியிலேயே சுமார் ஒரு…

29 minutes ago

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

43 minutes ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

53 minutes ago