“தலைமை கிட்ட எச்சரிச்சேன்… ஆனா சிலர் பேச்ச கேட்டு”…. செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி…. கொதிக்கும் தமிழக அரசியல்…!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது அரசியல் ரீதியாக தவறான அணுகுமுறை என்று கட்சியின் மேலிடத்திடம் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் வெற்றிகரமான ஒரு கூட்டணியை முறித்துக் கொண்டால், ‘துரோகம் செய்துவிட்டோம்’ என்ற அவப்பெயருக்குத் தேவையின்றி ஆளாக நேரிடும் என எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் தவறான ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டே கட்சியின் தலைமை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துவிட்டதாக அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தேசிய அரசியலிலும் மாநில அளவிலும் தற்போதைய சூழலில் திமுக கூட்டணியின் முக்கியத்துவத்தை செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தலையெழுத்தையும் அரசியல் போக்கையும் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான இடத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அத்தகைய வலுவான கூட்டணியை விட்டு விலகுவது கட்சியின் எதிர்காலத்திற்குப் பாதகமாகவே அமையும் என்றும் அவர் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார். மேலிடத்தின் இந்த திடீர் முடிவு குறித்துத் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடையே எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு அவரது இந்தப் பேட்டி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

8 seconds ago

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

10 minutes ago

திகில் நிமிடங்கள்!…நொடியில் தப்பிய உயிர்… பைக்கில் சென்ற தம்பதி மீது சரிந்து விழுந்த ராட்சத தூண்… வெளியான பகீர் CCTV காட்சி…!!

காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…

17 minutes ago

இப்படியொரு பரிசா?… லைசென்ஸ் கூட இல்லை… ஆனால் 15 வயது மகனுக்கு ரூ.1.62 கோடி BMW கார்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…

27 minutes ago

உஷார் மக்களே!… ரூ.1,000 கமிஷனுக்காக ஆதார் கொடுத்த மாணவர்கள்… வீடு தேடி வந்த வங்கி நோட்டீஸால் உறைந்து போன குடும்பம்… நடந்தது என்ன?…!!

சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…

36 minutes ago

கந்துவட்டி கொடுமை… 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்த தாய்… கடைசி வீடியோவில் சொன்ன அதிர்ச்சி தகவல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…

42 minutes ago