கொளத்தூருக்கு உடனடியாக இடைத்தேர்தல்?…. மாஃபா பாண்டியராஜன் சொன்ன பகீர் தகவல்…. அதிமுகவின் மெகா பிளான்…!

Spread the love

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருமங்கலம் மோகன் தலைமையில் திருமங்கலத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கழகச் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய மாஃபா பாண்டியராஜன், தற்போதைய அரசானது ஒரே ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் வலுவான எண்ணம் உருவாகியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பேசும்போது, ‘நான் ஒரு கிறிஸ்தவன்; கிறிஸ்தவம் எனக்கு அன்பின் மொழியைக் கற்றுக்கொடுத்தது’ என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய மாஃபா பாண்டியராஜன், அன்பின் மொழியை இந்து மற்றும் இஸ்லாமிய மதங்கள் வழங்கவில்லையா என வினவினார். அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்து இயங்கக் கூடாது என்றும், தற்போதைய ஆட்சியாளர்களின் போக்கினால் அரசாங்கத்தின் மீதே பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தொகுதிப் பக்கமே வராத மக்கள் பிரதிநிதிகளையும், தவெக தலைவர் விஜய்யின் வருகை குறித்த அரசியல் நகர்வுகளையும் விமர்சித்தார். இன்னும் இரண்டே முக்கால் ஆண்டுகளில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி எனக் கூறினார். அதுமட்டுமின்றி, கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் வரக்கூடும் என்பதால், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது 11,000 பேருக்கு விலையில்லா நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போது அதே டிக்கெட்டுகள் ரூ.1,000-க்கு ஆளுங்கட்சியின் பகுதி மற்றும் மாவட்டச் செயலாளர்களால் விற்பனை செய்யப்படுவதாகச் சாடினார். தாம்பரத்தில் ஏற்கனவே நிறைவடைந்த பணிகளுக்கு மீண்டும் டெண்டர் கோரப்பட்டு, அது குறித்துக் கேள்வி எழுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரே தவிர, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிப் பேசினார்.

Nanthini

Recent Posts

“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு…

7 minutes ago

BREAKING: CM விஜய் போட்ட ஒற்றை உத்தரவு… வீரமணி வழக்கில் சிக்கிய அடுத்த நபர்…. அதிரடி கைது….!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான தொழிலதிபர் வீரமணிக்கு உடந்தையாக இருந்த கணேசன் என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது…

17 minutes ago

“ஜோதிடர் சொல்றதை செய்யுறவருக்கு எதுக்கு CM பதவி?”…. ஜோசியரையே CM ஆக்கிவிட்டு போயிருக்கலாம்…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வாரி முடிச்ச சீமான்….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவெக ஆட்சியில் ரூல்ஸ் எதுவுமில்லை, வெறும்…

24 minutes ago

கோட்டை வட்டாரத்தில் திடீர் திருப்பம்…. தலைமைச் செயலாளர் சாய்குமார் நீக்கம்?…. முதலமைச்சர் விஜயின் அதிரடி முடிவு…!

தமிழ்நாடு மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பை முடுக்கிவிடுவதிலும், அரசின் திட்டங்களைக் கடைசி மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் தலைமைச் செயலாளரின் பங்கு…

33 minutes ago

பூங்காவில் கேட்ட அலறல் சத்தம்… 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. டெல்லியில் மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பு….!

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பூங்காவில் இருந்த 17 வயது…

44 minutes ago

“அம்மா, அக்கா கண்முன்னே துடிதுடித்து முடிந்த 4 வயது சிறுவனின் உயிர்”… சாலை விபத்தில் நிகழ்ந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (32), திங்கள்கிழமை மாலை தனது 4 வயது மகன் மற்றும் 7…

50 minutes ago