பூங்காவில் கேட்ட அலறல் சத்தம்… 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. டெல்லியில் மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பு….!

Spread the love

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பூங்காவில் இருந்த 17 வயது சிறுமிக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை இழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கல்காஜி மந்திர் அருகே உள்ள பூங்காவில் அச்சிறுமி தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 நபர்கள் தங்களைக் காவல் துறையினர் எனக் கூறி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அச்சிறுமியை அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஆசிப் என்பவரைக் காவல் துறையினர் சுற்றி வளைத்தபோது, அவர் தாக்க முற்பட்டதால் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைநகரில் கடந்த 10 நாட்களில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் 4-வது பாலியல் கொடூரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 13 அன்று ஸ்வரூப் நகரில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்; செப்டம்பர் 16 அன்று சதர் பஜார் பகுதியில் 10 வயது மாணவி கைகால்கள் கட்டப்பட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்; மேலும் செப்டம்பர் 21 அன்று கிஷன் கஞ்ச் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வாறு அடுத்தடுத்து நடைபெறும் கொடூரச் சம்பவங்கள் டெல்லி நகரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, மக்கள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…

4 minutes ago

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

12 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

17 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

19 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

28 minutes ago