FLASH: தமிழகத்தில் 4 புதிய அருங்காட்சியங்கள்… பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. ஏற்கெனவே கீழடி மற்றும் பொருநை போன்ற இடங்களில் தமிழர் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த புதிய முன்னெடுப்புகள் இளைய தலைமுறைக்கு நமது வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் எனத் தெரிவித்தார்.

பண்பாட்டுத் துறைக்கான முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, உலகப் பொதுமறையான திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபையின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். உலக அரங்கில் தமிழின் தொன்மையையும், திருக்குறளின் அறநெறிகளையும் பறைசாற்றும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 193 நாடுகளின் மொழிகளில் திருக்குறளைக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காகப் பிரத்யேக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

9 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

10 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

10 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

10 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

10 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

10 மணத்தியாலங்கள் ago