2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில், தற்போதைய அமைச்சர்களான பொன்முடி, மனோ தங்கராஜ், ஆர்.காந்தி மற்றும் கயல்விழி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் மனோ தங்கராஜ் ஏற்கனவே இருமுறை வெற்றி பெற்ற பத்மநாபபுரம் தொகுதி இந்த முறை சிபிஎம் (CPM) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இடங்கள் பறிக்கப்பட்டது கட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அமைச்சர்களின் வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆர்.காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் காந்தியும், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் கௌதம சிகாமணியும் திமுக வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். மூத்த அமைச்சர்களை ஓரம் கட்டிவிட்டு, புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த வேட்பாளர் பட்டியல் அமைந்துள்ள
