நெல்லை டவுன் பகுதியில் பாத்திர வியாபாரி வீட்டில் 33 பவுன் நகைகள் திருடுபோனதாகக் கூறப்பட்ட வழக்கில், கணவருக்குத் தெரியாமல் நகைகளை விற்றுவிட்டு திருட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி பாலகுருசாமி, குடும்பத்தினருடன் கோயில் திருவிழாவுக்காக சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் காணாமல் போனதாகக் கூறி அவர் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசாரின் கவனத்தைத் திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தாலும், பீரோவின் பூட்டு உடைக்கப்படாமல் அதன் சாவியைப் பயன்படுத்தியே திறந்திருந்தது போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாலகுருசாமியின் மனைவி ரேவதியின் செல்போன் அழைப்பு விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனுடன் ரேவதிக்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேவதியின் குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பி வந்தபோது ஏற்பட்ட இந்தப்பழக்கம், பின்னர் நீண்டகாலத் தொடர்பாகவும் மாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாகக் கணவருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்த நகைகளை ரேவதி சிறுகச் சிறுக நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்து வந்துள்ளார். அந்த நகைகள் அனைத்தும் ஏற்கெனவே அடகு வைக்கப்பட்டு செலவழிக்கப்பட்ட நிலையில், வீட்டின் நகைகளை வைத்துப் புதிய சொத்து வாங்கப் போவதாகப் பாலகுருசாமி கூறியதால் பீதி அடைந்த ரேவதி, திருட்டு நாடகமாடத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, குடும்பத்தினர் வெளியூர் சென்ற நேரத்தில் நவநீதகிருஷ்ணன் வீட்டின் கதவை உடைத்துள்ளார்; ரேவதி சாவியைக் கொண்டு பீரோவைத் திறந்து மிளகாய்ப் பொடியைத் தூவி திருட்டு நடந்ததாகச் சித்திரிக்க முயன்றுள்ளார். தற்போது போலீசார் ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனைக் கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரேவதியின் நேரடிப் பங்கு குறித்தும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…