தனுசில் ஒரே நேரத்தில் ஒன்று சேரும் சுக்கிரன், செவ்வாய்… வாழ்க்கையில் அதிர்ஷ்டம், பண யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

பொதுவாகவே நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு மற்றும் அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். அதனைப் போலவே நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்குகிறார். என் நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் செவ்வாய் தனுசு ராசிக்கு செல்கின்றார். அதனைப் போலவே டிசம்பர் மாதம் இறுதியில் சுக்கிரனும் தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார். இதன் காரணமாக குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன.

மிதுனம்:

   

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் விரும்பிய முடிவுகளை அடைய முடியும். வாழ்க்கையியில் இதுவரை இருந்து வந்த சிரமங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். நிறுவனத்தில் தங்களுக்கான ஒரு பெயரை உருவாக்க முடியும். திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த நிதி பிரச்சனைகள் தீரும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி உருவாகும்.

   

கும்பம்:

 

பல வழிகளில் அதிர்ஷ்டம் கிடைக்கும். பல்வேறு துறைகளில் பெரிய வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடியும். வேலையில் உயர்ந்த பதவிகளை அடையலாம். வணிகர்கள் அதிக லாபம் ஈட்டலாம். புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதிநிலை மேம்படும். மாணவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

துலாம்:

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையின் பல அம்சங்களில் வளர்ச்சி உருவாகும். இதனால் நிதிநிலைத் தன்மை கிடைக்கும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். அன்பிற்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் அமைதியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையும் மேம்படும்.