ஸ்டாலின் செம ஹேப்பி…! கொத்தாக திமுகவில் இணைந்த பாமகவினர்… கடும் ஷாக்கில் ராமதாஸ்…!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகளில் கூட்டணி அமைப்பது, வாக்காளர்களை கவரும் விதமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் .அதிமுக சார்பாக மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற முழக்கத்தோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். விஜய்யும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் ஒரு சிலர் கட்சி தாவலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் ஊராட்சியில் இருந்து, பாமகவைச் சேர்ந்த தொண்டர்கள் 25 பேர், டி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்கள்.