தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் புதிய ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் ஏசி,பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். இது ஒருபுறம் மக்களுக்கு மக்களாட்சி செய்தி என்றால் மறுபுறம் இன்னொரு குட் நியூஸ்வெளியாகியுள்ளது.
அதாவது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தீபாவளியையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
