தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட வரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சமீபத்தில் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பணிகளை தொடங்கியுள்ள விஜய் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பதில் அளித்தார். சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அவர், தமிழக வெற்றி கழகம் கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் திமுக, பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்துள்ளார் என நிர்மல் குமார் கூறியுள்ளார். இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து தான் போட்டியிடும் என்ற நிலைப்பாட்டை நிர்மல் குமார் மீண்டும் உறுதி செய்துள்ளார்
