ரேஷன் கார்டு, பட்டா முதல் மகளிர் உரிமைத் தொகை வரை… விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

தமிழகத்தை பொறுத்தவரையில் பொதுமக்கள் அரசு சேவைகளை பெறுவதற்கு மாத கணக்கில் அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது அரசு துறைகளை மிக எளிதில் அணுக முடியும். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாமில் நேரடியாக கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். ஒருவேளை உங்களுடைய கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் நீண்ட நாட்கள் காலம் தாழ்த்தப்பட்டால் உங்களுடைய மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்கள். இதன் மூலமாக எளிதில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

அப்படி இல்லை என்றால் உங்கள் கோரிக்கை காண பதில் உடனடியாக கிடைக்கும். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் முகாம்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எல்லா கோரிக்கைகளுக்கும் இந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்க முடியும். ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை , நடுந்தோர் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மனு அளிக்க முடியும். அதே சமயம் தெரு விளக்கு மற்றும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாகவும், தொகுப்பு வீடு,தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளுக்கும் மனு அளிக்கலாம்.

   

ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சனை இருக்கும் பட்சத்திலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தொழில் கடன் வேண்டுதல், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வேண்டுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளிக்க முடியும். எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.