திடீர் திருப்பம்… 2026 தேர்தல் கூட்டணி… இரவோடு இரவாக டிடிவி தினகரன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது இபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் NDA கூட்டணியில் அங்கம் வகித்த நிலையில் இ பி எஸ் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதால் கூட்டணியில் இருந்து விலகினர்.

தற்போது அவர்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. அதேசமயம் பாமக, தேமுதிக மற்றும் அமமுக உள்ளிட்டவை இன்னும் கூட்டணியை இறுதிச் செய்யவில்லை. முக்கியமாக இபிஎஸ் தலைமையை ஏற்க மறுக்கும் டிடிவி, விஜய் பக்கம் செல்வாரா அல்லது வேறு கூட்டணி அமைப்பாரா என்பதற்கு இதுவரை பதில் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அதாவது பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்தாவது அணி அமைக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் கூட்டணி அமைக்க போகும் கட்சி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.